ஊடக அறம், உண்மையின் நிறம்!

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியைத் தயாரித்துள்ள சீனா

உலகின் மிகப்பெரிய  தொலைநோக்கியை, சீனா அதிகாரபூர்வமாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

தொலைநோக்கியின் பரப்பளவு சுமார் 30 காற்பந்துத் திடல்களுக்குச் சமம். அது குய்ஸோவ் மாநிலத்தில் அமைந்துள்ளதாக Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பூமியைப் போல் மற்ற கோள்களில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை பூமியிலிருந்து கண்டறிய அந்தத் தொலைநோக்கியைத் தயாரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அது வானலைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், நிலையான, நம்பகமான முடிவுகள் கிடைத்துள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.

“Sky Eye” அதாவது “விண் கண்” என்ற பெயரில் சீனர்கள் அதை அழைக்கின்றனர்.

தொலைநோக்கி 2016ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டதாகவும், உத்தேசப் பிழைகளை அடையாளம் கண்டு அவற்றைச் சரி செய்ய சில ஆண்டுகள் ஆனதாகவும் Xinhua செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

புதிய தொலைநோக்கி சில குறிப்பிடத்தக்க அறிவியல் தகவல்களைச் சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கியைக் காட்டிலும் இது 2.5 மடங்கு மேம்பட்ட ஆற்றல் கொண்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் சீனா விண்வெளி ஆய்வுகளில் ரஷ்யாவையும் அமெரிக்காவையும் முந்திச்செல்ல விழைகிறது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram