தலைப்புச் செய்திகள்நேரலைவெளிநாடு

உலக நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா.. ஒரே நாளில் 1,480 பேர் பலி

உலக நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா

அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,480 பேராக அதிகரித்துள்ளது. மற்ற எந்த நாடுகளிலும் இது போல் ஒரே நாளில் இத்தனை பலி எண்ணிக்கை பதிவாகியிருக்கவில்லை.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,76,995 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

வல்லரசு நாடான இங்கு இதுவரை 7,406 பேர் பலியாகிவிட்டனர். இதை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு கடுமையாக போராடி வருகிறது. ஆனால் பலி எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

சீனாவில் வைரஸ் நிலை என்ன?

முதன்முதலில் வைரஸ் பரவிய சீனாவை காட்டிலும் அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கொரோனா பலி எண்ணிக்கையில் சீன அரசு உண்மையைதான் சொல்கிறது என்பது நமக்கு எப்படி தெரியும் என ட்ரம் கேட்டார்.

திணறும் அமெரிக்க அரசு

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அமெரிக்காவில் 1,480 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது கிட்டதட்ட1500 பேர் வரை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எந்த உலக நாடுகளிலும் இது போன்று அதிக அளவிலான உயிரிழப்பு எண்ணிக்கை இல்லை. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க அரசு திணறி வருகிறது.

கவலை வெளியிட்ட ட்ரம்ப்

உலக நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா: அமெரிக்காவில் பலி எண்ணிக்கை இனி வரும் வாரங்களில் மிகவும் அதிகமாக இருக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் கவலை தெரிவித்திருந்தார். அது போல் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்திலிருந்து 2 இலட்சமாக உயர வாய்ப்பு இருப்பதாக அந்த நாட்டு மருத்துவர் அதிர வைக்கும் தகவலை தெரிவித்திருந்தார்.

அது போல் மருத்துவ உபகரணங்களுக்கும் இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எப்போதும் மற்ற நாடுகளுக்கு உதவு பழக்கத்தை கொண்ட அமெரிக்கா, தற்போது ரஷ்யாவின் உதவியை நாடியது.

மாஸ்க் அணிவது கட்டாயம்

பொது இடங்களுக்கு வருவோர் துணியிலால் ஆன மாஸ்க்குகளை கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

என்னதான் நோய் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இன்னும் வைரஸ் அவர்களது உடலிலேயே இருக்கும் என்பதால் இந்த பரிந்துரையை செய்துள்ளது. அமெரிக்காவில் இறந்தோரின் 25 சதவீதம் மக்கள் நியூயார்க்கை சேர்ந்தவர்கள்.

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close