இலங்கை

ஊடுருவலுக்கு உள்ளாகியுள்ள டெலிகிராம்

குறுந்தகவல் சேவையான டெலிகிராம் மீது பெரிய அளவிலான ஊடுருவல் இடம்பெற்றுள்ளதாகவும், அது சீனாவில் தொடங்கியதுபோல் தோன்றுவதாக அந்தச் சமூக ஊடக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கில் தொடரும் அரசியல் பதற்றமும் அதற்கு ஒரு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்நகரில் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் மின்னியல் கண்காணிப்பைத் தவிர்க்க டெலிகிராம் சேவையைப் பயன்படுத்தி வந்தனர்.

சில வகைக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவோரைச் சீனாவுக்கு விசாரணைக்கு அனுப்ப வகைசெய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைக்கவும் அதனை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த ஊடுருவல் காரணமாக டெலிகிராம் சேவையைப் பெறுவதில் பிரச்சினையை எதிர்நோக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது.

எப்போதெல்லாம் ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றனவோ, அப்போதெல்லாம் இப்படிப்பட்ட ஊடுருவல் நடப்பதாக, டெலிகிராம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றுப் பாதிக்கப்பட்ட தமது சேவை பின்னர் சீரடைந்ததாக டெலிகிராம், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close