எதிர்வரும் 30ஆம் திகதி 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை

71
colombotamil.lk

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது.

இதன்போது, ஐந்தாம்கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறும் என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

இன்று காலை 10.15 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமான பேச்சுவார்த்தையில் இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்று இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஏற்கெனவே 3 பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.