வணிகம்

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் காரணமாக சீர்குலைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மேலும் பல துறைகளுக்கு என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 10ஆம் திகதி முதல் இந்தக் கடன் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா பொட்டோ கடன் திட்டத்தின் மூலம் பிரதேச அபிவிருத்தி வங்கிகளில் உயர்ந்தபட்ச தொகையாக ஐந்து இலட்சம் ரூபாயை வட்டியில்லாக் கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

12 மாத கால சலுகைக் காலத்துடன் மூன்று வருடங்களில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். இசைக்குழு உறுப்பினர்களுக்கும் 3.4 சதவீத வட்டியின் கீழ் 5 இலட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் கடன் பெற்றுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களின் ஏப்ரல் மற்றும் மே மாத கடன் தவணைக்கு சலுகைக் காலத்தை வழங்குமாறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close