ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஐந்து வருடங்களில் இல்லாத விலைவாசி உயர்வு

இந்தியாவின் சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் 2019 டிசம்பர் மாதத்தில் 7.35 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது என்றும், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிக அளவாகும் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) நேற்று (13) வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index) அடிப்படையிலான விலைவாசி உயர்வு 2018 டிசம்பரில் 2.11 சதவிகிதமாகவும் 2019 நவம்பர் மாதத்தில் 5.54 சதவிகிதமாகவும் இருந்தது. இதுவே 2019 டிசம்பர் மாதத்தில் 7.35 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

இந்த அளவு என்பது இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருக்கும் அதிகபட்ச விலைவாசி உயர்வான 6 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. இதையடுத்து பணவீக்கத்தை வரம்பிற்குள் வைத்திருக்குமாறு மத்திய ரிசர்வ் வங்கியை அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது.

இந்த விலை உயர்வு விகித அதிகரிப்புக்கு வெங்காய விலை உட்பட்ட முக்கிய காய்கறிகளின் விலையே முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதற்கு முன்னர், சில்லறை விலைவாசி உயர்வு அதிகபட்சமாக கடந்த ஜூலை 2014இல் 7.39 சதவிகிதமாக உயர்ந்தது. நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (சிஎஃப்பிஐ) அல்லது உணவு விலைவாசி உயர்வு டிசம்பர் மாதத்தில் 14.12 சதவிதமாக உயர்ந்து நவம்பர் மாதத்தில் 10.01 சதவிகிதமாக இருந்தது.

விலைவாசி உயர்வு இப்படி அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி, அதன் அடுத்த இரு மாத நாணயக் கொள்கையை பிப்ரவரி 6ஆம் திகதி அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.