ஒரே நாளில் சிக்கிய 19 போலி வைத்தியர்கள்

இதயும் பாருங்க

நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தியுள்ளார் : கமல்ஹாசன்

பதாகை விஷயத்தில் நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தியிருப்பதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த...

ஐ.தே.க. உயர்மட்ட தலைவர்கள் இன்று கலந்துரையாடல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (22) இடம்பெறவுள்ளதாக...

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை...

வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து 35 குழுக்களாகப் பிரிந்து நடத்திய சோதனையில் 19 போலி வைத்தியர்கள் சிக்கினர்.

வேலூர் மாவட்டம் முழுவதும், போலி வைத்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. மருத்துவர்களிடம் உதவியாளராக இருப்பவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் ஆகியோர் தங்களது வீடுகளில் கிளினிக் வைத்தும், தனியாக கிளினிக் நடத்தியும் மருத்துவம் பார்த்து வருவதாகவும் புகார்கள் குவிந்தன.

10ஆம் வகுப்பைக் கூட நிறைவு செய்யாத பலர் போலி வைத்தியம் செய்து, பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழவே, அதனை விசாரிக்க 35 குழுக்கள் அமைக்கப்பட்டன.

அந்தக் குழுக்கள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக சோதனை மேற்கொண்டன. 100க்கும் மேற்பட்ட இடங்களில் அந்தக் குழுக்கள் நடத்திய சோதனையில், திருப்பத்தூரைச் சேர்ந்த குலசேகரன், சத்யநாராயணன், மாது, வெங்கடேசன், அச்சுதன் வாணியம்பாடியைச் சேர்ந்த யுவராஜ், மோகன்ராஜ், சண்முகசுந்தரம், மேல்பட்டியைச் சேர்ந்த குப்புசாமி பரதராமி பகுதியை சேர்ந்த ரமணா, ஸ்ரீநிவாசலு, துரைசாமி , சுரேஷ்குமார், சுமைதாங்கி ஜெயபால், சோளிங்கர் பிரபு பனப்பாக்கம் அருள்தாஸ் ஆகிய 19 போலி வைத்தியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

10க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுவதால் அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட போலி வைத்தியர்களின் கிளினிக்குகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

கிளினிக்குகளில் இருந்த மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து பேசிய மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மின், தொடர்ந்து கண்காணித்து தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும், மாவட்டத்தில் போலி வைத்தியர்கள் முழுவதுமாக களையெடுக்கப்படுவார்கள் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

போலி வைத்தியர்களிடம் இருந்து பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அரசின் அங்கீகாரம் பெற்ற மருத்துவர் தானா என்பதை உறுதி செய்த பின்னரே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று யாஸ்மின் அறிவுறுத்தியுள்ளார்.

கொத்து கொத்தாக மர்மமான முறையில் இறந்துகிடந்த 90 தெருநாய்கள்

மக்கள் தீர்ப்பு தவறு, பிக்பாஸையே எகிறிய வனிதா!


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார்...

More Articles Like This