உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கான்பூர் மற்றும் ஃபதேபூரில் 7 பேரும், ஜான்சியில் 5 பேரும் , ஜலாவுனில் 4 பேரும், ஹமீர்பூரில் 3 பேரும், காசிப்பூரில் 2 பேரும் மற்றும் ஜான்பூர், பிரதாப்கர், கான்பூர் தேஹத் மற்றும் சித்ரகூட் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதற்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆழ்ந்த இரங்கல் மற்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் இறந்தவர்களது குடும்பங்களுக்கு தலா 4 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.