Sri Lanka 24 Hours Online Breaking News

‘ஓ மை கடவுளே’ திரைப்பட ட்ரைலர்

0

அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை அஷ்வத் மாரிமுத்து என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், சாரா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

இந்த படம் காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது.

ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரித்து உள்ள இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார்.

மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like