ஆஷிமா நெர்வால்

விஜய் ஆண்டனி நடித்த ‛கொலைகாரன்’ படத்தில் நடித்த ஆஷிமா நெர்வால், தற்போது ஆரவ் ஜோடியாக ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில், தனது தாயுடன் கோவாவுக்கு சுற்றுலா சென்ற ஆஷிமா, அங்குள்ள கடற்ரையில் கவர்ச்சியாக உடை அணிந்து வலம் வந்திருக்கிறார். இந்த படங்களை வெளியிட்டுள்ள ஆஷிமா தனது பயண அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, “மனதை ஒருமுகப்படுத்த, உடலை புத்துணர்வூட்ட ஒரு சிறு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டேன். கடற்கரை பயணம் என்பது ஆன்மாவின் தியானம் என்றார்கள். பயணம் எப்போதும் புதிதாய் கற்றுக்கொள்ள, ஆன்மாவை புதிப்பித்து கொள்ள ஒரு அற்புத வாய்ப்பு. பயணங்கள் எப்போதும் உற்சாமூட்டுபவை.

இயற்கையின் எழிலில் கலந்து மனதை ஒருமுகப்படுத்தி கொள்வதற்கும், புதிய எண்ணங்கள் மலர்வதற்கும் என்னைப் போன்ற நடிகர் நடிகைகளுக்கு பயணங்களே அற்புத வாய்ப்பு.

ஓய்வில் உடலை புதுப்பித்துக் கொள்வதற்கே இப்பயணம். என் அம்மா எனது வாழ்வின் தோழி. இப்பயணத்தில் என்னுடன் இணைந்திருந்தார். கடவுள் தந்த வரமாய் அன்பின் வடிவாய் என் தாய் என்னுடனேயே இருந்தார்.

காற்றில் ஈரத்தில் கலந்திருக்கும் உப்பு, நம் உடலிலும் முடியிலும் கலந்திருக்கும். அது பரந்து விரிந்திருக்கும் நீல நிற கடலின் ஒரு துளியாகவே கருதினேன்” என்கிறார் ஆஷிமா.