32 C
Colombo
Thu, 09 Apr 2020 03:27:31 +0530

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி சீனாவில் கொரோனா வைரஸால் மரணங்கள் பதிவான ஜனவரி மாதத்திலிருந்து, முதல் முறையாக மரணங்கள் ஏதும் நிகழாத நாள் இன்று (7) என அந்நாட்டின் தேசிய சுகாதார...
More

    கடும் பாதுகாப்புடன் நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

    COVID-19

    ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

    மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

    சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

    கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

    ஊரடங்கு உத்தரவு நீடிப்பு.. வெளியானது புதிய அறிவிப்பு

    கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை...

    டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

    பின்னர், சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைதானவர்களில் ஒருவர் சிறார் என்பதால், குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார்.

    ஒருவர் திஹார் சிறையில் தற்கொலை செய்துகொள்ள முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் அக்‌ஷய் குமார் சிங் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    எனினும், கருணை மனு, நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்று சட்டப்போராட்டம் நீடித்துக்கொண்டே போனதால், தண்டனையை நிறைவேற்றுவது தாமதமாகியது.

    மூன்று முறை தூக்கு தண்டனையை நிறைவேற்ற தேதி அறிவிக்கப்பட்டு பின்னர், ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில், எல்லா கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில், நேற்று, குற்றவாளிகளில் இருவரான முகேஷ் சிங் மற்றும் அக்‌ஷய் குமார் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், இன்று அவர்களுக்கு தூக்குத் தண்டனை உறுதியானது.

    பவன் குப்தா, சம்பவம் நடைபெற்றபோது தான் டெல்லியில் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    அதேபோல், மற்றொரு குற்றவாளியான அக்‌ஷய் குமார், குடியரசுத் தலைவர் கருணை மனு நிராகரித்ததை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார்.

    இதனை நேற்று பிற்பகல் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று காலை 5.30மணிக்கு நால்வரும் தூக்கிலிடப்படுவது உறுதியானது.

    இதற்கான ஏற்பாடுகளை திஹார் சிறை நிர்வாகம் மேற்கொண்டது. சிறைக்கு வெளியே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

    சரியாக 5.30 மணிக்கு நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 20 நிமிடங்களாக தூக்கிட்ட நிலையிலேயே உடல்கள் வைக்கப்பட்ட நிலையில், பின்னர் மருத்துவர்கள் பரிசோதனை செய்து நால்வரும் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

    Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

    இதயும் பாருங்க

    அண்மைய செய்திகள்

    ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

    மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

    சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

    கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

    நாட்டாமையின் வேற லெவல்… வைரலாகும் வீடியோ

    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் சுவராசியமான பல வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை...

    மது கிடைக்காததால் மனோரமாவின் மகன் விபரீத செயல்

    பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக...