Sri Lanka 24 Hours Online Breaking News

கடைசி ஆசை: மௌனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள்!

0

பெப்ரவரி 1ஆம் திகதி நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் 4 பேரின் கடைசி ஆசை குறித்து திகார் சிறை கேட்டுள்ளது.

நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான முகேஷ் சிங், வினய் சர்மா, அக்ஷய் சிங், பவன் குப்தா ஆகிய நான்கு பேருக்கும் 2018ல் தூக்குத் தண்டனை உறுதியான நிலையில் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது.

விரைவில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்பயா தாயாரின் கோரிக்கையை ஏற்று டெல்லி உயர் நீதிமன்றம் வரும் பெப்ரவரி 1ஆம் திகதி 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது.

இதன்மூலம் நிர்பயா வழக்கு இறுதிக் கட்டம் எட்டியுள்ளது. 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான பணிகள் திகார் சிறையில் நடத்து வருகின்றன. குற்றவாளிகளின் உடல் மற்றும் மன நிலை குறித்து மருத்துவக் குழு பரிசோதித்து வருகிறது. சிசிடிவி மூலம் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 4 பேரின் கடைசி விருப்பம் குறித்து திகார் சிறை அவர்களிடம் கேட்டுள்ளது, கடைசி ஆசை, கடைசி முறையாக குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பது மற்றும் தங்களின் சொத்துகளை யாருக்கு கொடுப்பது என்பது போன்றவை குறித்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருவதாக திகார் சிறை வட்டாரங்கள் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே சிறை விதிகளின்படி, குற்றவாளிகள் தூக்கிலிடுவதற்கு முன் அது குறித்த தகவலை குடும்பத்தினருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால் நால்வரின் குடும்பத்தினருக்கும் திகார் சிறை நிர்வாகம் சார்பில் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான தகவலைக் கடிதம் மூலம் அனுப்பியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like