ஊடக அறம், உண்மையின் நிறம்!

கட்டுவாப்பிட்டி தேவாலயம் திறந்துவைப்பு

 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாததாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி புனித செப்ஸ்டியன் தேவாலயம் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று (21) காலை திறந்து வைக்கப்பட்டது.

தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் மூன்று மாதங்கள் நிறைவடையும் நிலையில் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது.

கூட்டுத்திருப்பலியை அடுத்து, உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டதுடன், அதன் பின்னர் மறைபாடசாலை கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வில், அமைச்சர் சஜித் பிரேமதாச, கத்தோலிக்க மதத்தலைவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர், பிரதேசவாசிகள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.