கணவன் – மனைவி படுகொலை: விசாரணைகள் ஆரம்பம்

76
ஊரடங்குச் சட்டம்
colombotamil.lk

மாத்தளை கலேவலை தேவஹூவ பிரதேசத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கமத்தொழில் உற்பத்தி உதவி ஆராய்ச்சியாளரான 53 வயதான காமினி சுரவீர மற்றும் அவரது மனைவியான கமத்தொழில் தயாரிப்புக்களுக்கான மத்திய மாகாண சபையின் விருதை வென்ற 51 வயதான அனுலா சுரவீர ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 8 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்களால் இந்த படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்காலாத் என சந்தேகம் வெளியிட்டுள்ள கலேவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!