கரன்னாகொடவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை நிறைவு

43
W3Schools

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம், வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்றைய தினம் நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளனர்.

2008-2009ஆம் ஆண்டுகளில் கொழும்பின் தெஹிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டனர்.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் நான்கு முறைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

W3Schools