ஊடக அறம், உண்மையின் நிறம்!

கருவறையில் ஊஞ்சலாடிய அந்தியூர் பத்ரகாளியம்மன்! வைரலாகும் வீடியோ!

கர்த்திகை தீபத்தன்று கோவில் நடை சாத்திய பிறகு கருவறையில் அம்மன் ஊஞ்சலாடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பக்தர்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீப சிறப்பு வழிபாடுகள் முடிந்ததையடுத்து,

கோவில் நடையை சாத்திவிட்டு பூசாரி வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பூசாரி புறப்பட்ட சென்ற சில மணி நேரத்திற்கு பின்னர் கோவில் கருவறையில் இருந்து ஊஞ்சலாடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கோயில் செயல் அலுவலர் சரவணன் அன்றைய தினம் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது அதில், கருவறை முன்பு உள்ள திரையில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்று பதிவாகி இருந்தது.

சுமார் 2 மணி நேரம் இந்த காட்சி தெரிவதாகவும், இது அம்மன் ஊஞ்சல் உற்சவ காட்சி போல் இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.