Sri Lanka 24 Hours Online Breaking News

கர்ணன் ஷூட்டிங் அப்டேட்!

0

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிலவரம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் திரைப்படம் கர்ணன். இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அசுரன் படத்தைத் தொடர்ந்து கலைப்புலி தாணு – தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘கர்ணன்’ திரைப்படமும் அசுரன் போன்றே முக்கிய சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் பணிகள் தென்மாவட்டங்களில் நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தில் நடிக்கும் மலையாள நடிகர் லால், தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். தனுஷும் கர்ணன் திரைப்படமும் எல்லைகளைக் கடந்து மிக சிறந்த உயரத்தை அடைய உந்துதல் அளித்து வருகிறார்.

சிறந்த முறையிலான தனது வேலையின் மூலம் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கி வருகிறார்” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தில் 96 திரைப்படம் மூலம் பிரபலமான கௌரி கிஷண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like