கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு

இதயும் பாருங்க

மண்சரிவில் சிக்கிய வீடு: தாய் உயிரிழப்பு; மூன்று பிள்ளைகள் மீட்பு

காலி - வதுரப்ப கொக்காவல பகுதியில் வீடொன்றின் மீது இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மூன்று பிள்ளைகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று...

‘தாமரைக் கோபுரம்’ திறந்து வைக்கப்பட்டது

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரைக் கோபுரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று திறந்து வைக்கப்பட்டது. கொழும்பில் சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இந்தக் கோபுரம்...

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய...

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 50,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 68,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டின. கே.ஆர்.எஸ். அணைக்கு விநாடிக்கு 41,000 கன அடி வீதமும், கபினி அணைக்கு நொடிக்கு 17,000 கன அடி வீதமும் நீர் வந்து கொண்டிருக்கிறது.

காலை 8 மணி நிலவரப்படி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 38,000 கன அடி வீதமும், கபினியில் இருந்து விநாடிக்கு 12,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக விநாடிக்கு 50,000 கன அடி வீதம் காவிரியில் நீர் பாய்கிறது.

ஏற்கெனவே திறக்கப்பட்டதையும் சேர்த்து தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 70,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலிலும் இதே அளவு நீர் பாய்வதால், அங்கு குளிக்கவும், பரிசல் ஓட்டவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 68,000 கன அடியாக நீர்வரத்து உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 65,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாயில் இருந்து விநாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120.740 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 94.65 டி.எம்.சி.யாக இருக்கிறது.

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 76 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வரும் நிலையில் அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குளித்தலை அருகே உள்ள மாயனூர் கதவணை வழியாக முக்கொம்பு சென்றடைகிறது.

தற்போது மாயனூர் கதவணைக்கு, நீர் வரத்து வினாடிக்கு 76 ஆயிரத்து 100 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 75 மதகுகள் வழியாக வினாடிக்கு 74 ஆயிரத்து 500 கன அடி நீர் காவிரியிலும், பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கனஅடியும், புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் 400 கனஅடியும், தென்கரை பாசன வாய்க்காலில் 800 கனஅடி என, வினாடிக்கு மொத்தம் 76 ஆயிரத்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

உச்ச நீர்மட்டம் 17 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது நீர்மட்டம் 11 புள்ளி 81 அடியாகவும், நீர் இருப்பு 377 புள்ளி 89 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

மண்சரிவில் சிக்கிய வீடு: தாய் உயிரிழப்பு; மூன்று பிள்ளைகள் மீட்பு

காலி - வதுரப்ப கொக்காவல பகுதியில் வீடொன்றின் மீது இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மூன்று பிள்ளைகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் பெய்துவரும் கடும் மழை...

கடும் மழையினால் 41 வீடுகள் பகுதியளவில் பாதிப்பு

காலி மாவட்டத்தில் நேற்று (22) பெய்த கடும் மழையின் காரணமாக, 7 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த, 861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. வௌ்ளம் காரணமாக 5 வீடுகள்...

கடலுக்கு செல்லவேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் ஆழ்கடல் மீனவர்ளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம்...

நாட்டில் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி

சப்ரகமுவ, தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் வரையான கடும் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாளை மறுதினம் (25) திகதி வரை இந்த நிலை காணப்படும் என்றும்...

More Articles Like This