Sri Lanka 24 Hours Online Breaking News

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதி சடங்கு இன்று

0

காலம்சென்ற சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதி சடங்கு அரச அனுசரனையுடன் இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள தனியார் மருத்துமனையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் நேற்று முன்தினம் இரவு தனது 99 ஆவது வயதில் காலமானார்.

1919ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராக செயற்பட்டு பின்னர் திரைத்துறையில் பிரவேசித்திருந்தார்.

1956ஆம் ஆண்டு இவரது முதலாவது திரைப்படமான ‘ரேகாவ’ திரைப்படம் வெளியாகியது.

2003ஆம் ஆண்டு டிசெம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like