Wednesday, January 29, 2020.
Home சினிமா கஸ்தூரிக்கு வந்த சோதனை! இந்த வாரம் வெளியேற்றம்?

கஸ்தூரிக்கு வந்த சோதனை! இந்த வாரம் வெளியேற்றம்?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் தர்ஷன், சாண்டி, சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் தர்ஷன், சாண்டி ஆகிய இருவருக்கும் அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளதால் இருவரும் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இல்லை. ஆனால் நால்வரில் கஸ்தூரி மிகக்குறைந்த சதவீத வாக்குகளே பெற்றுள்ளார்.

பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த கஸ்தூரியிடம் பார்வையாளர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் இன்று வரை அவர் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை என்பது மட்டுமின்றி ஒருசில பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்தார்.

அதுமட்டுமின்றி சக போட்டியாளர்கள் யாருக்கும் கஸ்தூரியை பிடிக்கவில்லை. முதல் நாளில் இருந்தே கஸ்தூரியை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். எனவே முதல் நாளில் இருந்து இன்று வரை அவர் பிக்பாஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் சம்பந்தம் இல்லாமல் பேசுவது, வனிதாவுடன் மோதல், கவினை சீண்டிவிடுவது, டாஸ்க்கில் சொதப்புவது ஆகியவை காரணமாக அவர் இந்த நிகழ்ச்சிக்கு லாயிக்கில்லை என்றே பார்வையாளர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இதுவரை ஒளிபரப்பான மூன்று பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் வைல்ட் கார்ட் எண்ட்ரியான ஒருவர் ஓரிரு வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது அனேகமாக கஸ்தூரியாகத்தான் இருக்கும்.

#Cheran #Sandy #Tharshan #Kasthuri

இதயும் பாருங்க...

இறால் தம் பிரியாணி

தமிழ் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த முக்கியமான பகுதி உணவு. விருந்தோம்பலுக்கு நற்பெயர் பெற்ற தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற ஒவ்வோர் உணவு வகை இருக்கிறது. இந்திய உணவு வகைகளில், தென்னிந்திய உணவு வகைகளுக்கு நிச்சயம்...

சைக்கோ விமர்சனம்

இருட்டான ஒரு பகுதியில் ஒரு லைட் மட்டும் எறியத் தொடங்க, கீழே ஒரு பெண்ணை கிடத்தி வைத்திருப்பது தெரியத் தொடங்குகிறது. இறுக்கமாக கட்டி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண் இருக்கும் ஒரு அறைக்குள் நுழையும் ஒருவன்,...

சீன சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்குவது இடைநிறுத்தம்

சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்குவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்துவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ்...

‘நெகிழ்வு தன்மையை முதலாளிமார் சம்மேளனம் கடைபிடிக்க வேண்டும்’

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் நெகிழ்வு தன்மையை கடைபிடிக்க வேண்டும் என நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று (23) இடம்பெற்ற புத்தக கண்காட்சி...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...