காங்கிரஸ் பெயரை நீக்க மம்தா மறுப்பு

42
W3Schools

தனது கட்சியின் பெயரில் இருந்து காங்கிரஸ் என்ற பதத்தை நீக்குவதற்கு மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில், அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரஸ், என்ற பெயரில் தான் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு 1998 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதனால், கட்சி பெயரில் இருந்து காங்கிரஸ் என்ற பதத்தை நீக்க முடியாது என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸின் வழித்தோன்றலாக உருவாக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ், மேற்குவங்கத்தில் இடதுசாரி ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து 12 வது லோக்சபா தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

W3Schools