32 C
Colombo
Mon, 06 Apr 2020 05:11:47 +0530

யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை

கொரோனோ சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனோ தொற்று நோய் சந்தேகத்தில் யாழ் போதனா...
More

  காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

  COVID-19

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest Sir...

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம்

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம் தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில், 1.66 கோடி மக்களைக் கொண்ட ஈக்குவேடார் மீதும் தன் கொலைவெறியைக் காட்டி வருகிறது கொரோனா. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465...

  கொரோனாவை தடுக்கும் ஒட்டுண்ணி மருந்து

  இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரஸ் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தும் என அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை...

  கொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்

  இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. சீனாவில் தான் கொரோனா பரவியது என...

  நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம்.

  வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள் மட்டும் சிலருக்கு நிறைவேற்றப்படாமலே இருக்கும்.

  அப்படியானால் நாம் வேண்டிக் கொள்ளும் விதத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது என்பதுதானே அர்த்தம். கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த இறைவனை நம்மால் வாங்கி விட முடியாது.

  ஆனால் ஆத்மார்த்தமான பக்தி ஒன்று மட்டும் இருந்தால் போதும் அந்த இறைவன் எப்பொழுதும் நம்முடனே இருப்பார். இந்த கதையை கேட்கும் போது உங்களுக்கு எல்லாமே புரியவரும்.

  நாமெல்லோருக்கும் பிடித்தமான அந்த மாய கிருஷ்ணனின் லீலை தான் இந்த கதை. சிலருக்கு இந்த கதை தெரிந்திருக்க கூட வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணரின் கதையை எத்தனை முறை படித்தாலும் சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது.

  கிருஷ்ணன் வசீகரமான முகத்தை கண்டால் அவரை தன்னிடமே வைத்துக்கொள்ள வேண்டுமென்று அனைவருக்கும் தோன்றும். கிருஷ்ணருக்கு மனைவியாக ருக்மணி, சத்யபாமா இவர்கள் இருந்தார்கள்.

  ருக்மணி மிகவும் பொறுமை வாய்ந்தவள். கிருஷ்ணனின் முதல் மனைவியான ருக்மணிக்கு தன் அரசி என்ற கர்வம் துளி கூட இல்லை. இதில் சத்தியபாமா தோற்றத்தில் மிக அழகாக காணப்படுவாள்.

  இவள் மன்னன் சத்ரஜித் மகளும் கூட. அரச பரம்பரையை சேர்ந்தவள் என்பதால் இவளுக்கு கர்வமும் கொஞ்சம் அதிகம் தான். அந்த கிருஷ்ணனை எப்போதும் தன்னிடமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சத்யபாமாவின் எண்ணம்.

  ஆனால் ருக்மணிக்கு தன் கணவர் அருகில் இல்லை என்றாலும், உண்மையான அன்புடன் மனதார அந்த கிருஷ்ணனை நினைத்து கொண்டே இருப்பாள்.

  ஒருநாள் நாரதர் துவாரகைக்கு வருகை தந்தார். நாரதர் வருகின்றார் என்றாலே ஏதோ ஒரு குட்டி கலகம் செய்யப்போகிறார் என்பதுதான் அர்த்தம்.

  ஆனால் அவரது கலகம் நன்மையில் போய் முடியும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. மெதுவாக உள்ளே நுழைந்த நாரத முனி சத்தியபாமாவை நோக்கிச் சென்றார்.

  சத்தியபாமாவைப் பார்த்து ‘எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. கிருஷ்ணரை அதிகமாக நேசிப்பது ருக்மணியா அல்லது சத்யபாமாவா? இந்தக் குழப்பமானது எனக்கு மட்டுமல்ல துவாரகையில் உள்ள ஊர் மக்கள் அனைவரும் இந்த சந்தேகத்தோடு தான் இருக்கிறார்கள்.’ என்று கூறி குழப்பத்தினை ஏற்படுத்திவிட்டார்.

  கர்வம் கொண்ட சத்தியபாமா இதை சுலபமாக விட்டுவிடுவார்களா? ‘கிருஷ்ணரை அதிகமாக நேசிப்பது இந்த சத்யபாமா தான் என்பதை நிரூபிக்கவும், கடைசிவரை என் கணவர் என்னுடன் மட்டும் இருக்கவும், கிருஷ்ணரின் மனதில் நான் மட்டும் இடம் பிடிக்கவும், என்ன செய்யலாம்? என்ற ஆலோசனையை நாரத முனியிடமே கேட்டாள் சத்தியபாமா.

  நாரத முனிவர் சத்யபாமாவிற்கு ஒரு ஆலோசனை கூறினார். நாரதரின் ஆலோசனைப்படி சத்தியபாமாவும், நாரதரும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள். ஆனால் இந்த நாடகத்தில் மாட்டிக் கொள்ளப் போவது தான்தான் என்பதை சத்தியபாமாவால் அப்போது உணர முடியவில்லை.

  கிருஷ்ணரை வைத்து நாரத முனியும், சத்தியபாமாவும் ஒரு சடங்கினை நடத்தி, அந்த சடங்கின் இறுதியில் கிருஷ்ணரை, நாரதருக்கு தானமாக கொடுத்துவிட்டு, ‘பின்பு தானமாக கொடுத்ததை எண்ணி வருந்திய சத்யபாமா தன்னிடம் உள்ள செல்வங்களை எல்லாம் கிருஷ்ணருக்கு நிகராக, நாரதரிடம் கொடுத்து கிருஷ்ணரை திரும்ப மீட்பது போல்’ ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

  நாடகமும் அரங்கேறியது. ஆனால் கிருஷ்ணருக்கு நிகரான எடை கொண்ட தங்கமானது இந்த உலகத்தில் உண்டா? ஆனால் இதை உணராத சத்தியபாமா தன்னிடம் உள்ள நகைகள் அனைத்தையும் கொண்டுவந்து கிருஷ்ணர் அமர்ந்திருந்த தராசுக்கு எதிர்ப் பக்கத்தில் வைத்தாள்.

  சத்யபாமாவின் செல்வம் கிருஷ்ணரின் எடைக்கு ஈடாகவே இல்லை. கிருஷ்ணரின் தராசு தட்டு கீழ்பக்கமாகவே தான் இருந்தது.

  சபையில் நின்றுகொண்டிருந்த நாரதரோ கிருஷ்ணருக்கு இணையாக செல்வத்தை தரவில்லை என்றால் கிருஷ்ணரை தனக்கு அடிமையாக்கி கொள்வேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

  என்ன செய்வது என்று அறியாமல் தவித்துக் கொண்டிருந்த சத்யபாமா, தன் ருக்மணி அக்காவிடம் சென்று உதவியை நாடினாள். கிருஷ்ணரின் நாமத்தை மனதார நினைத்துக் கொண்டிருக்கும் ருக்மணி கிருஷ்ணருக்கு நிகராக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை எல்லாம் எடுத்துவிட்டு ஒரே ஒரு துளசி இலையை மட்டும் தராசின் மறு பக்கத்தில் வைத்தாள்.

  தராசு முள் தானாக துளசி இலையின் பக்கம் சாய்ந்து விட்டது. உண்மையான பக்தியுடனும், பாசத்தோடும் வைத்த அந்த ஒரு இலையானது கிருஷ்ணரின் எடையைவிட அதிகமாக இருந்தது. இதைப்பார்த்த சத்தியபாமா தன் தவறை உணர்ந்தாள்.

  இதிலிருந்து என்ன புரிகிறது? சத்தியபாமா கிருஷ்ணனுகாக கொடுத்த அவ்வளவு நகைகளிலும் அன்பும், பாசம் இல்லை. வெறும் வரட்டு கவுரவம் மட்டும்தான் இருந்தது. என்ன விலை கொடுத்தாவது கிருஷ்ணரை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் சத்தியபாமாவிற்கு இருந்தது. சத்யபாமாவின் எண்ணம் நிறைவேறவில்லை.

  ஆனால் ருக்மணி வைத்த அந்த துளசி இலைக்கு எவ்வளவு மதிப்பு என்று பாருங்கள். தன் கணவனை மீட்டு எடுக்க வேண்டும் என்று உண்மையான பக்தியுடன் செயல்பட்ட ருக்மணிக்கு வெற்றி கிடைத்தது.

  அந்த கிருஷ்ண பரமாத்மா என்றும் உண்மையான பக்திக்கு மட்டுமே அடிபணிவார். அந்த இறைவனை நெருங்க காணிக்கை முக்கியமல்ல. பக்தியே முக்கியம் என்பதை உணர்த்த தான் இந்த துலாபாரம் லீலை கிருஷ்ணரால் அரங்கேற்றப்பட்டது.

  இதயும் பாருங்க

  அண்மைய செய்திகள்

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest Sir...

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம்

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம் தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில், 1.66 கோடி மக்களைக் கொண்ட ஈக்குவேடார் மீதும் தன் கொலைவெறியைக் காட்டி வருகிறது கொரோனா. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465...

  கொரோனாவை தடுக்கும் ஒட்டுண்ணி மருந்து

  இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரஸ் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தும் என அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை...

  கொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்

  இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. சீனாவில் தான் கொரோனா பரவியது என...

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest...