32 C
Colombo
Thu, 09 Apr 2020 04:21:12 +0530

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி சீனாவில் கொரோனா வைரஸால் மரணங்கள் பதிவான ஜனவரி மாதத்திலிருந்து, முதல் முறையாக மரணங்கள் ஏதும் நிகழாத நாள் இன்று (7) என அந்நாட்டின் தேசிய சுகாதார...
More

  காத்துவாக்குல ரெண்டு காதல்… ஸ்லிம் சேதுபதி… இது ஒரு காதல் அட்டாக்!

  COVID-19

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  ஊரடங்கு உத்தரவு நீடிப்பு.. வெளியானது புதிய அறிவிப்பு

  கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை...

  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரௌடி தான் திரைப்படத்துக்குப் பிறகு, உடனடியாக பல திரைப்படங்களை எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

  ஆனால், சினிமா பக்கமே தலையைக் காட்டாமல் ஒதுங்கியே இருந்த விக்னேஷ் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.

  விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் முக்கோணக் காதல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இதில் அப்படி என்ன புதிதாக இருக்கப்போகிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

  விக்னேஷ் இயக்கத்தில் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடியின் கெமிஸ்ட்ரி வேலை செய்திருந்ததை ரசிகர்கள் பார்த்துவிட்டனர்.
  இப்போது மீண்டும் அதே கூட்டணி என்பதும், அதில் சமந்தா எந்த வகையில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதுமே இப்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

  நானும் ரௌடி தான் திரைப்படம் எத்தனையோ விதத்தில் பல சிறப்புகளைப் பெற்றிருந்தாலும், பல வருடங்காளாக நயன்தாராவைப் பார்த்து வரும் ரசிகர்களுக்கே புதிதாய் தெரிவது போல, உடல் எடையை இறக்கி, அதற்கேற்ப உடை மற்றும் ஆபரணங்களை தேர்வு செய்து மீண்டும் ஒரு கனவுக் கன்னியைக் கொடுத்திருந்தார் விக்னேஷ்.

  அதுபோலவே, இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் எடையை முன்னெப்போதும் இல்லாததைவிட அதிகமாக குறைக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரே காரணத்துக்காகவே இந்தத் திரைப்படம் இவ்வளவு தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.

  விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவருமே பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர்கள். விஜய் சேதுபதி நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்.

  இந்நிலையில் மற்ற ஷூட்டிங்கையெல்லாம் நிறுத்திவிட்டு, சில காலம் பயிற்சியெடுத்து உடல் எடையைக் குறைத்துவிட்டு ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவேண்டும் என்பதாலேயே காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் அறிவிப்பு தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.

  தற்போது ரஜினியின் 168ஆவது திரைப்படத்தில் நயன்தாராவும், விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் பிசியாக இருக்கிறார்கள்.

  சமந்தா ஏற்கனவே இந்தப்படத்துக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த ஷூட்டிங்கையெல்லாம் முடித்துவிட்டு முழுவதுமாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்துக்கு தங்களை முழுவதுமாக அர்ப்பணிக்கப்போகின்றனர் என்கின்றனர் படக்குழுவினர்.

  சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

  இதயும் பாருங்க

  அண்மைய செய்திகள்

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  நாட்டாமையின் வேற லெவல்… வைரலாகும் வீடியோ

  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் சுவராசியமான பல வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை...

  மது கிடைக்காததால் மனோரமாவின் மகன் விபரீத செயல்

  பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக...