கார்பன் பரிசோதனை அறிக்கை வெளியானது

கார்பன் பரிசோதனை அறிக்கை வெளியானது

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையானது இன்றைய தினம் சட்ட பூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பரிசோதனைக்காக சஅமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த பரிசோதனை அறிக்கை 14 நாட்களில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறித்த அறிக்கையானது இன்றைய தினம் சட்ட ரீதியான ஆவணமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த அறிக்கை தொடர்பான எந்த விவரங்களையும் தன்னால் வழங்க முடியாது எனவும் அவ் அறிக்கை தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பெற்று கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை குறித்த மனித புதைகுழியில் இருந்து 335 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 318 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews

Related posts