கொழும்பு, கிரான்ட்பாஸ் மாதம்பிட்டிய பொது மயானத்துக்கு அருகில் வைத்து பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் வெட்டிக் கொலை செய்யயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

பாதாள உலக குழு உறுப்பினர் ஆனமாலு ரங்க (39) மற்றும் 22 வயதுடைய இளைஞன் ஆகியோரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.