குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

31
குமார வெல்கம
W3Schools

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

போக்குவரத்து அமைச்சராக குமார வெல்கம பதவி வகித்த போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு பிரதிதலைவர் என்ற பதவியை உருவாக்கி அந்தப் பதவிக்கு தமக்கு நெருங்கிய ஒருவரை நியமித்து சம்பளமாக சுமார் 33 இலட்சம் ரூபாய் செலுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

W3Schools