கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 21 ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

முற்பகல் 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில், குளவிக் கொட்டுக்கு இலக்கான ஆண் தொழிலாளி ஒருவர் மாத்திரம் கொட்டகலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த தோட்டத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் நேற்றைய தினமும் குளவி கொட்டுக்க உள்ளான நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.