பொகவந்தலாவை, லொய்னோன் தோட்டபகுதியில் 14 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று சனிகிழமை காலை 09.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

குளவி கொட்டுக்கு இலக்காகிய 14 தொழிலாளர்களுள் இரண்டு ஆண் தொழிலாளர்களும் 12 பெண் தொழிலாளர்களும் வைத்தியசாலையில் அனமதிக்கபட்டனர்.

அதில் 10 பெண் தொழிலாளர்களும் இரண்டு ஆண் தொழிலாளர்களும் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், இரண்டு பெண் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.