குளவி கொட்டு

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் கிளயார் தோட்டம் ஸ்டேலின் பிரிவில் குளவி கொட்டுக்கு இழக்கான 10 பெண்கள், கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரம் ஒன்றில் இருந்த குளவிகள் கலைந்து வந்து இன்று முற்பகல் 10 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளிகளை தாக்கியுள்ளன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 பேரில் 4 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.