குளவி கொட்டு

நாவலப்பிட்டி பிரதேசத்தில் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன். மேலும் ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் மரமொன்றில் இருந்து கலைந்து வந்த குளவிகள் தாக்கியதில், 59 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

நாவலபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதகாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவர் மாத்திரம் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், ஏனையவர்கள் சிகிச்சைகளை பெற்று வெளியேறியுள்ளனர்.