கூட்டணி தொடர்பில் நான்காம் கட்ட பேச்சு ஆரம்பம்

70
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
colombotamil.lk

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன இணைந்து எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கியதேசிய முன்னணிக்கு எதிராக அமைக்க உத்தேசித்துள்ள புதிய கூட்டணி தொடர்பான நான்காம்கட்ட பேச்சுவார்த்தை  ஆரம்பமாகியுள்ளது.

எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த பேச்சுவார்தை ஆரம்பமாகியுள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றது.

அதனையடுத்து, மார்ச் 14ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலானது வெற்றியளித்திருந்தாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இரண்டாம்கட்ட சந்திப்பானது, மார்ச் 21ஆம் திகதி எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில், சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச் செயலாளர் றோஹண லக்ஷ்மன் பியதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோர் பங்கேற்றனர்.

பொது ஜன பெரமுன சார்பில் அந்த கட்சியின் தவிசாரளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப் பெரும ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் நான்காம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.