கெவுமாவின் விளக்கமறியல் நீடிப்பு

41
ஐக்கிய தேசியக் கட்சி
W3Schools

கெவுமா என அழைக்கப்படும் கெலும் இந்திக்கவை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர், இன்றைய தினம் மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கெவுமா என்ற சந்தேக நபர், ராவாத்தாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து 177 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ரீ – 56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஷின் திட்டமிடலுக்கு அமைய கொள்ளையிடப்பட்ட ,500 கோடி ரூபாய் பெறுமதியான வைரக்கல்லுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

W3Schools