Sri Lanka 24 Hours Online Breaking News

கேரள “டீ”க்காக ஆசைப்பட்டு காத்திருந்த ஓ.பி.எஸ்

0

சபரிமலைக்கு சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஊர் திரும்பும் வழியில் தேக்கடியில் காரிலிருந்து கொண்டே டீ வாங்கி பருகினார்.

சபரிமலையில் தரிசனம் முடித்த ஓ.பன்னீர்செல்வம் கேரள டீ குடிக்கவேண்டும் என அதிமுகவின் இடுக்கி மாவட்ட தலைவரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவர் வழக்கமாக தேநீர் பருகும் உணவகத்தில் டீ தயாராகிக் கொண்டிருக்கும்போதே ஓ.பன்னீர்செல்வம் தேக்கடி வந்துவிட்டார்.
அவருக்கு டீ வருவதற்கு முன்பே அங்கு மக்கள் கூட்டம் கூட தொடங்கிவிட்டது. பலர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து அருகில் இருந்த சிப்ஸ் மற்றும் நறுமணப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்று அவர் அமர்ந்தார்.

ஆனால் மக்கள் கூட்ட நெரிசல் காரணமாக அவருக்கு தேநீர் வந்து சேர்வது தாமதமாகவே அங்கிருந்து புறப்பட்டார்.

துணை முதல்வர் காரில் ஏறியபிறகே அவர் விரும்பி கேட்ட டீ வந்து சேர்ந்தது. அவரும் காரிலிருந்துகொண்டே தேநீரை ருசித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like