கே.டி.லால்காந்த

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த, அநுராதபுரம் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, அநுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தை அடுத்து கைதுசெய்யபட்ட லால்காந்வை, எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews