Latest news from around the world

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று திறப்பு

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளது.

நாளை இடம்பெறவுள்ள புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழாவுக்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூஜை, கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்; மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

-அரசாங்க தகவல் திணைக்களம்