Sri Lanka 24 Hours Online Breaking News

கொத்து கொத்தாக மர்மமான முறையில் இறந்துகிடந்த 90 தெருநாய்கள்

0

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், மர்மமான முறையில் இறந்து கிடந்த சுமார் 90 தெரு நாய்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கிழக்கு மஹாராஷ்ட்ராவின் வனப்பகுதியில் உள்ள சாலைகளின் பல்வேறு இடங்களில் அழுகிய துர்நாற்றம் வீசியதைக் கண்ட அப்பகுதி மக்கள், அங்கு சென்று பார்த்தபோது, கொத்து கொத்தாக தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தகவலறிந்து சென்ற காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள், 5 இடங்களில் சுமார் 90 தெரு நாய்கள், வாய் மற்றும் கால்கள் கயிறுகள்கொண்டு கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்துகிடந்ததைக் கண்டுள்ளனர்.

மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் அங்கு கிடந்த நிலையில், அவற்றில் சில நாய்கள் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரேத பரிசோதனைக்கு பின்னரே நாய்களின் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என கூறப்படும் நிலையில், விலங்குகள் மீதான கொடுமைத் தடுப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கட்டடங்கள் கையளிப்பு

லாஸ்லியா, சாண்டியை தள்ளிவிட்டதால் பரபரப்பு


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Get real time updates directly on you device, subscribe now.

You might also like