தலைப்புச் செய்திகள்நேரலைவெளிநாடு

கொரோனாவை தடுக்கும் ஒட்டுண்ணி மருந்து

இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரஸ் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தும் என அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மற்றொருபுறம் கொரோனாவை முழுவதுமாக அழிக்க தடுப்பு மருந்து கண்டறியும் சோதனைகளில் பல நாடுகளிலும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

தொடர்ந்து, அவுஸ்திரேலிய பல்கலையில் கொரோவை கட்டுப்படுத்தும் மருந்த குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் அது நோயை வளர விடாமல் தடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆன்டிவைரல் ஆராய்ச்சி இதழில் வெளியிட்ட ஆய்வில் கூறியதாவது : உலகெங்கிலும் ஏற்கெனவே கிடைக்கக்கூடிய ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து 48 மணி நேரத்திற்குள் உயிரணு கலாச்சாரங்களில் வளர்க்கப்பட்ட கொரோனா வைரஸ் பரவலை அழிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது கொரோனாவிற்கான புதிய மருத்துவ சிகிச்சையின் வளர்ச்சி மற்றும் சோதனைக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவர்மெக்டின் என்ற மருந்து, SARS-CoV-2 என்ற வைரஸை 48 மணி நேரத்திற்குள் செல் கலாச்சாரத்தில் வளரவிடாமல் தடுத்தது இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து, செல் வளர்ப்பு முறையில் பெருகி, கொரோனா வைரஸை வளரவிடாமல் தடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனை ஆராய்ச்சி செய்த அவுஸ்திரேலிய பல்கலைக்கழக ஆய்வாளர் கைலி வேக்ஸ்டாப் கூறுகையில், ‘ஒரு டோஸ் மருந்து, 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.

48 மணி நேரத்தில், வைரல் ஆர்என்ஏக்கள் அனைத்தையும் நீக்கிவிடுவதை கண்டறிந்தோம். இது பரவலாக பயன்படுத்தப்படும், பாதுகாப்பான மருந்து. இது மனிதர்களுக்கு எந்தளவு பயனளிக்கும், இவர்மெக்ட்டினின் எந்த செயல்முறை வைரஸை அழிக்கிறது என்பதை அடுத்து அடுத்து கண்டறிய வேண்டும்.’ என்றார்.

இவர்மெக்டின் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து, இது எச்.ஐ.வி, டெங்கு, இன்ப்ளூயன்ஸா மற்றும் ஜிகா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்களுக்கு எதிராக பயனளிக்கும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆய்வக அளவிலேயே பரிசோதனைகள் உள்ளன. உயிரினங்களிடம் பரிசோதிக்கும் போது தான் இது வெற்றி பெறுமா என்பது தெரியும். இவ்வாறு கூறினார்.

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close