Sri Lanka 24 Hours Online Breaking News

கொரோனா கிருமிக்கான தடுப்பு மருந்தை உருவாக்க ஆஸ்திரேலியா முயற்சி

0

ஆஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், சீனாவுக்கு வெளியே முதன்முறையாகக் கொரோனா வகைக் கிருமியைத் தங்கள் ஆய்வுக்காக வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

அதைக்கொண்டு, பரவி வரும் கிருமிக்கான தடுப்பு மருந்தை உருவாக்கிவிடமுடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

மெல்பர்னின் பீட்டர் டோஹெர்டி( Peter Doherty) கல்விக் கழக ஆராச்சியாளர்கள், பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடமிருந்து கிருமி வகையைப் பெற்றனர்.

ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா கிருமி, தடுப்பு மருந்தை உருவாக்கவும் துல்லியமான வகையில் முன்கூட்டியே அதைக் கண்டறியவும் கைகொடுக்கும்.

அத்துடன், கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தும் அதன் அறிகுறிகளை வெளிப்படுத்தாத நபர்களிடம் முன்கூட்டியே அதைக் கண்டறிவதற்கான முயற்சியிலும் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.

ஐரோப்பாவில் உள்ள உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவியலாளர்களுடன் ஆராய்ச்சியின் முடிவுகளைப் பகிர்ந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இதர பகுதிகளில் உள்ள ஆய்வுக்கூடங்களிலும் அவை பகிர்ந்துகொள்ளப்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like