Sri Lanka 24 Hours Online Breaking News

கொரோனா கிருமியால் 132 பேர் உயிரிழப்பு; 6,000 பேர் பாதிப்பு

0

கொரோனா கிருமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132க்கு உயர்ந்துள்ளது.

சீனாவில் சுமார் 6,000 பேர், கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அது சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

2003ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் நோயால் சீனாவில் சுமார் 5,300 பேர் பாதிக்கப்பட்டனர்.

தற்போது, கிருமித்தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 9,000 பேரின் நிலைமையைச் சீனாவின் சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

புதிய கொரோனா கிருமியை ஒரு ‘பேய்’ என்று வருணித்த சீன அதிபர் சி ஜின்பிங், சீனா அதை நிச்சயமாக முறியடித்துவிடும் என்று சூளுரைத்தார்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் நிபுணர்களை நாட்டிற்குள் அனுமதிக்க, சீனா ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வேளையில், தலைநிலச் சீனாவுக்குச் செல்வதன் தொடர்பில் பயணக் கட்டுப்பாடுகளை ஹாங்காங் அறிவித்துள்ளது.

எல்லைகளுக்கு இடையிலான ரயில் சேவைகளும் பயணப் படகுச் சேவைகளும் நாளையிலிருந்து நிறுத்தி வைக்கப்படும்.

விமானச் சேவைகள் பாதியாகக் குறைக்கப்படுவதோடு ஹாங்காங்கிற்கு வருவதற்கான தனிப்பட்ட பயண அனுமதிகள் நிறுத்திவைக்கப்படும்.

சீனாவுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடும்படி தைவானும் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like