இலங்கைநேரலைவிசேட செய்திகள்

கொரோனா தொற்றினால் இலங்கையில் மூன்றாவது நபர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.

மருதானை பகுதியை சேர்ந்த 72 வயதுடைய ஒருவரே அங்கொடை IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் கொரோனாவால் ஏற்கெனவே இருவர் உயிரிழந்திருந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் முதலாவதாக 60 வயதுடைய மாராவில் பகுதியை சேர்ந்த ஒருவரே மரணமடைந்திருந்தார்.

சுற்றுலா பயணிகளின் வழிகாட்டியாக செயற்பட்ட குறித்த நபர், சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்திருந்ததோடு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 30 ஆம் திகதி பிற்பகல் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொச்சிக்கடை போருதொட்டை பகுதியை சேர்ந்த 64 வயதுடையவர் கொரோனாவினால் உயிரிழந்த இரண்டாவது நபராவார்.

கொரோனா வைரஸினால் இதுவரை இலங்கையில் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close