இலங்கைகட்டுரைதலைப்புச் செய்திகள்

கொரோனா வைரஸால் இலங்கையில் புகை மற்றும் மதுப்பழக்கத்தில் ஏற்றபட்டுள்ள மாற்றம்

ஊடரங்கு உள்ளிட்ட கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இலங்கையில் மது அருந்தும் பழக்கம் 80 சதவீதமும், புகை பிடிக்கும் பழக்கம் 68 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் நடத்திய அண்மைய ஆய்வில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 54 சதவீதமானவர்கள் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது அருந்தவில்லை என்று கூறியுள்ளனர்.

14 சதவீதமானவர்கள் பொலிஸாரின் சோதனை காரணமாக மது அருந்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் 17 சதவீதமானவர்கள், ஊடரங்கு காலகட்டத்தில் தங்களுக்கு மது அருந்தும் எண்ணமே வரவில்லை எனக் கூறியுள்ளனர்.

புகைப்பழக்கத்தை பொறுத்தவரை, 48 சதவீதமானவர்கள் புகைப்பதை குறைத்துள்ளதாகவும், 20 சதவீதமானவர்கள் புகைப்பழக்கத்தை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபானங்கள் வாங்க அங்கு பெருந்திரளானோர் கூடியிருந்தனர்.

மேலும் அவர்கள் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட எந்த கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று (18) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் உள்ளதுடன், மதுக்கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close