Sri Lanka 24 Hours Online Breaking News

கொரோனா வைரஸுக்கே வைரல் காட்டிய மாணவர்கள்!

0

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது . இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், சீனாவிலிருந்து வந்த இந்திய மாணவர்கள் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸின் எதிரொலியாக சீனாவில் இருந்த இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

கடந்த இரு தினங்களாக ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். முதல் நாள் 324 பேரும், மறு நாள் 323 பேரும் இந்தியா வந்தடைந்தனர்.

இவர்களைப் பரிசோதிக்க டெல்லி விமான நிலைய ஓடுபாதை ஓரத்திலேயே சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அங்கு நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையின்போது கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டவர்கள் மனேசரியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு மருத்துவக் கண்காணிப்பிலிருந்து வரும் மாணவர்கள் இந்தி பாடல் ஒன்றுக்குக் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸால் வெளியுலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளபோதும் தங்களை உற்சாகம் குறையாமல் வைத்துக்கொள்ள முகக் கவசம் அணிந்தவாறு இவர்கள் இந்தி பாடலுக்கு நடனம் ஆடியது வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த மாணவர்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். அதுபோன்று மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரசால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் இந்த வைரஸ் அறிகுறியுடன் சீனாவிலிருந்து வந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

புனேவை அடுத்து சென்னையில் கிங் இன்ஸ்டிட்யூட்டில் கொரோனா சோதனை செய்வதற்காக ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் மக்கள் புரளியை நம்பாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது போன்று சீனா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like