இலங்கைநேரலைவிசேட செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் ஐந்தாவது நபர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் இலங்கையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

குறித்த நபர் அண்மையில் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளான 24 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கொரோனா வைரஸ்

இதேவேளை, சீனாவில் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. உலக அளவில் 190க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா நாடுகள் கொரோனாவால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,160த்தைத் தாண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,098,434ஆக காணப்படுகின்றது. 228,923 பேர் குணமடைந்துள்ளனர்.

யாழில் சிகிச்சை பலனின்றி பிறந்து நான்கு நாட்களே ஆன சிசு உயிரிழப்பு

பழங்குடிகளையும் விட்டுவைக்கவில்லை… அமேசான் காட்டிலும் கொரோனா… எப்படி?

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?அதிகபட்சமாக இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,681-த்தைத் தாண்டியுள்ளது. ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,198-த்தைத் தாண்டியுள்ளது.

சீனாவில் இதுவரையில் 3,326 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் மிகவேகமாக அதிகரித்துவருகிறது.

அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரையில் 277,161 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,392 பேர் உயிரிழளந்துள்ளனர்.

அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ள இத்தாலியில் 119,827 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.

ஸ்பெயினில் 119,199 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். 11,198 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் 53,183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,294 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில் 64,338 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். 6,507 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அண்டை நாடான இந்தியாவில் 2,567 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். 72 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close