கொள்ளையிடப்பட்ட 500 கோடி ரூபாய் பெறுமதியான வைரம் மீட்பு

81
வைரம்
colombotamil.lk

பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து 500 கோடி ரூபாய் பெறுமதியான நீல நிற வைரக்கல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வைரக்கல்லானது பன்னிப்பிட்டி – எருவ்வல பிரதேசத்தின் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பேலியகொட குற்றவிசாரணைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஷின் திட்டத்துக்கு அமையவே இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளமை உறுதியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews