குளவி கொட்டு
Close up of wasp

ஹட்டன், டிக்கோயா என்பில்ட் நோனா தோட்டத்தில் உள்ள 05ஆம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (11) காலை இடம்பெற்றுள்ளது.

ஆண் தொழிலாளர் புற்களுக்கு மருந்து அடித்து கொண்டிருந்த போது, மருந்தின் தாக்கம் காரணமாக முருங்கை மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 10 பெண்களும் ஆண் ஒருவருமே பாதிக்கப்பட்டுள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play