ஊடக அறம், உண்மையின் நிறம்!

கொழும்பில் மோடியின் இரண்டாவது தூதர்: என்ன நடந்தது ?

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று (18) சனிக்கிழமை மதியம் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை கொழும்பில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

தோவல் நேற்று இலங்கைக்கு ஒரு நாள் பயணமாக வந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மதிய உணவுடன் கூடிய சிறப்பு சந்திப்பு நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளும் பயங்கரவாத எதிர்ப்பு, உளவுத்துறை ஒத்துழைப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்திய தூதகரம் தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலின் போது, ​​அதிநவீன உளவுத்துறை கருவிகளை வாங்குவதற்காக இந்தியா சார்பாக இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் உதவியை தோவல் உறுதி செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை காலை 11 மணியளவில் இருவரும் சந்தித்ததாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான பல தலைப்புகளைப் பற்றி விவாதித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கலந்துரையாடலின் போது இராணுவ ஒத்துழைப்பு மற்றும் கடல் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்த சந்திப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் இன்று மிகவும் நல்லுறவான கலந்துரையாடல் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு, உளவுத்துறை பகிர்வு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வளர்ப்பது தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது சில முக்கிய விவாதங்கள் நடந்தன” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷபொறுப்பேற்றதும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு சென்றார்.

அதற்கு முன்பே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு வந்திருந்தார். அவருக்குப் பின் கொழும்பு வந்திருக்கும் இரண்டாவது இந்திய பிரதிநிதியாகிறார் தோவல்.

கடந்த வாரத்தில் மட்டும் ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உயரதிகாரிகள் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே நேற்று இந்திய பாதுகாப்பு ஆலோசகரான தோவல் பயணம் அமைந்திருக்கிறது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram