ஊடக அறம், உண்மையின் நிறம்!

கொழும்பு பங்குச் சந்தையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர துரித நடவடிக்கை

வீழ்ச்சியடைந்துள்ள கொழும்பு பங்குச் சந்தையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் கடந்த நான்கரை வருடங்களில் 15 வருட பின்னடைவைக் கண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பு பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதால், பங்குச் சந்தையின் தரகர் நிறுவனங்கள் பல மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு பங்குச் சந்தைத் தரகர்கள், சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.