ஹெரோய்ன்

கொழும்பு மேல்நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேல்நீதிமன்ற வளாகத்துக்குள் குறித்த சட்டத்தரணி நுழையும்போது அவரை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிளை காயப்படுத்தியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பிலான ​மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.