ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு செப்டெம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தை கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்தன்மை பாதுகாக்கப்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இல்லாது ஒழிப்பதற்கு எந்தவொரு கட்சிக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷவை சுற்றியுள்ள சிலர், அவரை தோற்கடிக்கும் வகையில் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இறுதியான தீர்மானமொன்றுக்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.