ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் தலதா மாளிகைக்கு சென்று இன்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் திப்பட்டுவே ஸ்ரீசுமங்கல தேரரரிடமும் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரிடமும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, கண்டி – கட்டுகெலே ஶ்ரீ செல்வ விநாயகர் பிள்ளையார் கோயில் மற்றும் மீரா மக்கம் பள்ளிவாசலுக்கும் ராஜபக்ஷ சகோதரர்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.